குறிக்கோள்கள் அல்லது Guiding or Directive Principles or Mission Statement
நாங்கள் கனவு காணும் இந்தப் புதிய திட்டத்தின் குறிக்கோள்களாக நாங்கள் எண்ணுவதை எழுத முயற்சிக்கிறோம்.
திட்ட வரைவு முழுமை நிலை பெறும் வரையில் குறிக்கோள்கள் மாற்றத்திற்குரியவை. தயவு செய்து உங்கள் ஆலோசனைகளை தந்து அருளவும்.
1. இந்த்த் திட்டம் இளநிலை மாணவ சமுதாயத்தைக் குறித்து வரையறுக்கப் ப்டுகிறது.
மாணவர்கள் தங்களையும் தாங்கள் சார்ந்த சமூகத்தையும் சுற்றியுள்ளள அமைப்புகள் (Systems or Organization) குறித்து ஒரு செயல் முறை அறிவை வளர்த்துக் கொள்ள உதவி புரியவேண்டும். அமைப்புகள், அரசு சார்ந்தோ அல்லது தனியார் சார்ந்தோ இருக்கலாம். அமைப்புகள் பற்றியான் அறிவு அவர்களுக்கு பின்னாளில் அந்த் அமைப்புடன் இணைந்து பணியாற்றக் கூடியதான பலத்தையோ அல்லது அது போன்ற அமைப்பினை பின்னாளில் உருவாக்கி வள்மாக்குவதற்கான ஒரு அடிப்படை அறிவை அவர்களிடத்தில் வளர்க்க உதவும் என்று இந்தக் குழு பூரணமாக நம்புகிறது.
2. மேற்சொன்ன அமைப்பு சார்ந்த அடிப்படை அறிவை, தான் சார்ந்த சமூகத்தின் நலன்களுக்கு முறைப்படியும் அதற்கு மேலும் பயன்படுத்துவதற்கான சிந்தனைகளை மாணவர்களிடம் வளர்ப்பது.
3. தன்னைப் பற்றி மட்டுமில்லாமல் தான் சார்ந்த சமூகததையும் அதன் நலன்களையும் சேர்த்து சிந்திக்கும் எண்ணங்களை அவர்களிடம் வ்ளர்ப்பது.
4. சுயமுன்னேற்ற எண்ணங்கள், தலைமைப் பண்புகள் ஆகியவற்றை மாண்வர்களிடம் வள்ர்ப்பத்ற்கான் வாய்ப்புக்களை உருவாக்குவது.
5. மேற்சொன்ன எல்லாவற்றையும் சேர்த்து மாணவர்களை நமது நாட்டின் "மாதிரி குடிமகன்" களாக (model citizens) உருவாக்குவது
இவை சேர்ந்து நாங்கள் தவிர்க்க நினைக்கும் இரு முக்கியமான விஷயங்கள்,
மொழி, இனம் சார்ந்த குறுகலான எண்ணங்கள் மாணவர்களிடம் பரவுவதை இந்த இயக்கம் முடிந்தவரையில் த்விர்க்கும்