ஒரு புதிய திட்டம் - தேவை ஆலோசனை
வளர்ந்து வரும் இளைய சமுதாயத்திற்கு சில சுய முன்னேற்ற மற்றும் சமுக நல சிந்தனைகளை அவர்களின் உள்ளத்தில் இளம் பிராயத்திலேயே விதைக்கும் ஒரு திட்டத்தின் வரைவு நகலை இங்கு வெளியிட உள்ளோம்.
இப்பொழுது இது இன்னும் சிந்தனையில் ஒரு விதையாகவே இருக்கிறது. இது சம்பந்தமாக சில பெரியவர்களிடமும், ஆசிரியர்களிடமும், பெற்றோர்களிடமும் பேசி அவர்கள் கருத்துக்களையும் ஏற்று சிந்தனைகளைச் சீர் படுத்திக் கொண்டிருக்கிறோம்
இங்கு இந்தப் பதிவில் இதற்கான திட்ட வரைவு வடிவத்தை எழுத முயற்சிக்கிறோம்.
இந்தத் திட்ட வரைவு வடிவம் மூன்று பகுதித் தலைப்புக்களில் எழுதப்படும்.
1. திட்டத்திற்கான தேவை (Project Drivers)
2. திட்டத்தின் செயல் நடவடிக்கைகள் (Project Activities)
3. திட்டச் செயல் வடிவம் (Execution Plan)
தற்சமயம் இந்தத் திட்டத்தைச் செயல் படுத்த் எந்த விதமான நிதி உதவியையும் வெளியிலிருந்து நாடும் எண்ணமில்லை. அனைத்தும் எங்கள் சொந்த முயற்சியில் செய்ய ம்ட்டுமே எண்ணியுள்ளோம். இது சம்பந்தமான முடிவுகள் பிறகு அறிவிக்கப்படும்
இந்த்த் திட்டத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.. பெயருக்கான ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன். இதற்குத் தகுந்த பெயரை சொல்லும் முதல் நபருக்கு ஒரு நல்ல பரிசு காத்திருக்கிறது
அன்பு நெஞ்சங்கள் தங்கள் மேலான ஆலோசனைகளைத் தந்து இத் திட்டத்தை வெற்றிகரமாக்க உதவுவீர்கள் என நம்புகிறேன்.
என்றும் உங்கள் நலன் விரும்பும்
திட்டப் பணிக்குழு
1 Comments:
சீமாச்சு, ராம்கி:
தற்போது தொழில் சம்பந்தமான சில துரிதகதி திட்டங்களில் ஈடுபட வேண்டியுள்ளதால், மற்றொரு சமயம் உங்களை அணுகுகிறேன்.
வாழ்த்துகள்.
Sun Mar 19, 04:55:00 AM GMT+5:30
Post a Comment
<< Home